Perambalur

News February 19, 2025

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் வருகின்ற 25ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம்,மதிப்பூதியம், சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் என அறிவிப்பு.

News February 19, 2025

டேராடூன் ராணுவ கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு!

image

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்) சேர்வதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு எப்படி விண்ணப்பிப்பது?, தகுதிகள், வயது வரம்பு என்ன? என்பது குறித்து <>http://www.rimc.gov.in/<<>> என்ற இணையவழி மூலமாக அறிந்து கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க.

News February 18, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு 01.06.2025 நடைபெறவுள்ளது தேர்விற்கு
www.rimc.gov.in இணையவழி மூலமாக கட்டணம் செலுத்தி பெற்ற லாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சாலை பூங்கா நகர் சென்னை 60003 என்ற முகவரிக்கு 31.3.2025 அனுப்பிட வேண்டும் என கலெக்டர் இன்று தகவல்.

News February 18, 2025

பெரம்பலூர்: கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் பயிலும் மாணவிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பல பதக்கங்களை வென்றதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று சந்தித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் இரா.பொற்கொடி உடன் இருந்தார்.

News February 18, 2025

வேப்பந்தட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் – ரஞ்சனி (25) தம்பதியருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த ரஞ்சனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2025

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில்“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”திட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 19.02.2025 அன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் இன்று தகவல்.

News February 17, 2025

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் எண் 1098பற்றி மக்களிடையே விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கூடுதல் விவரங்களுக்கு 04328296209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News February 17, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 308 மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 308 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 17, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான குறும்படப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் குறும்படங்கள் dswoprmblr2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு GOOGLE DRIVE LINK ஆக 03-03-2025 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04328-296209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இன்று தகவல்.

News February 17, 2025

போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கிய நபர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டார அரசு மருத்துவமனையின் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவின் username மற்றும் password ஐடியை வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கிய கும்பகோணத்தை சேர்ந்த முகமது பரித் (39) என்பவரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!