Perambalur

News June 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் தேதி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலிக்கான ஜமாபந்தி குன்னம் தாலுக்காவில் ஆட்சியர் தலைமையிலும் பெரம்பலூர் தாலுக்காவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் , வேப்பந்தட்டை தாலுக்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்காவில் சார் ஆட்சியர் தலைமையிலும் வரும் ஜூன்18 முதல் ஜூன்27 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். ‌‌

News June 15, 2024

குன்னம் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஆலத்தூர் தாலுகா சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் குன்னத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஒரு லாரியை முந்தி வந்த மற்றொரு லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 15, 2024

களைகட்டிய ஆட்டுச் சந்தை விற்பனை

image

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆட்டுச் சந்தையில் பெரம்பலூர் சுற்றுவட்ட கிராமங்கள் மற்றும் திருச்சி, சேலம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

News June 14, 2024

பெரம்பலூர் அருகே பாடாலூரில் விபத்து

image

பெரம்பலூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக நெடுஞ்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விழிப்புணர்வு டிஜிட்டல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News June 14, 2024

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

image

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதில், ஆர்வமுள்ளவர்கள் <>https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page<<>> என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533977, 8925533978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

பெரம்பலூர்: சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், தாலுகாகளுக்கு தனித்தனி கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. அதன்படி,  பெரம்பலூர்- அருமடல், வேப்பந்தட்டை -பிம்பலூர் , குன்னம்-பெண்ணக்கோனம், ஆலத்தூர்-சில்லக்குடி என ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான கோரிக்கை வைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை

image

தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் (ஜூன் 14) இன்று விசாரணை நடைபெற்றது. இதில், வேப்பந்தட்டை, மற்றும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து RTI – 2005-இன் படி சமூக ஆர்வலர்கள் அன்னமங்கலம் முருகானந்தம், குப்புசாமி ஆகியோருக்கு தகவலை தர மறுத்தது உள்ளிட்ட 6 வழக்குகள் மீது தகவல் ஆணையர் செல்வராஜ் விசாரணை மேற்கொண்டார்.

News June 14, 2024

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ஆவது படிக்கும் 16 வயது மாணவி. இவரின் தாயார் ஏற்கனவே இறந்த நிலையில் மாணவியின் தந்தை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை நேற்று(ஜூன் 13) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 14, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

News June 13, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.