Perambalur

News December 16, 2024

பெரம்பலூர்: கம்பீரமாக நிற்கும் ரஞ்சன்குடி கோட்டை

image

பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை 1600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் வம்சம் வந்த தூங்கானை மறவன் அரசன் கட்டியது. இவருக்கு பின் பல அரசர்கள் இக்கோட்டையில் இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் இந்த கோட்டை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். 1751இல் வால்கண்டா போரில் இறந்தவர்கள் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டனர். பல போர்களை கண்ட கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

News December 14, 2024

பேருந்து மோதி குழந்தை உயிரிழப்பு

image

பசும்பலூர் கிராமத்தில் சிங்காரவேலு-சந்தியா என்றவர்களின் குழந்தையை தனியார் பள்ளிக்கு அனுப்புவதற்காக, சந்தியா தனது இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டரை வயது ஆண் குழந்தை தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கைகளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 13, 2024

பெரம்பலூரில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சி நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்தால் டிசம்பர் 13 அன்று நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு கணினிஅறிவியல்,வேளாண்மை பதிவியல் மற்றும் 10ஆம் வகுப்பு ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் நடைபெறாததால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

மருதையாறு வெள்ளப்பெருக்கு அபாயம்

image

பெரம்பலூர் மற்றும் அரியலூர் சுற்றியுள்ள பல கிராமப்புறங்களில் இருந்து வரும் மழைநீர் இந்த மருதையாறு வழியாக செல்கிறது. இந்த மருதையாறு வாய்க்கால்கள் முழுவதும் சீமைகருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அரியலூர் செல்லும் சாலை முழுவதும் நிரம்பி வழிகிறது.. இதனால் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் அரியலூர் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

News December 13, 2024

வெங்கலம் பெரிய ஏரியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கலம் பெரிய ஏரியில் மதகு அருகே உள்ள கரை சீரமைக்கப்பட்டுள்ளதையும், விசுவக்குடி நீர் தேக்கம் பாதுகாப்பு குறித்தும், அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் தொடர்பாக, இன்று (13.12.2024) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News December 13, 2024

தனியார் துறை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில், தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

News December 13, 2024

முகாமில் தங்கிய நபர்களுக்கு உணவு வழங்கிய கலெக்டர்

image

குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வேள்வி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமினை,  பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு மற்றும் பால் போர்வைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News December 13, 2024

பெரம்பலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சியை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 13, 2024

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் சேதங்கள், பிற சேவை குறைபாடு குறித்த புகார்களை தீர்க்க “நம்ம சாலை” என்ற தொலைபேசி செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும் சரி செய்யப் படும். குறைகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

ஊரக திறனறித் தேர்வு ஒத்திவைப்பு 

image

தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் 14ஆம் தேதி ஊரக திறனறித் தேர்வு (Trust) நடைபெறுவதாக இருந்தது. தொடர்ந்து கனமான மழை பெய்து வருகிறது. மழை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போலவே தொடர்ந்ததால் மாணவ மாணவிகளின் நலன் கருதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!