Perambalur

News August 19, 2024

பெரம்பலூரில் அரசு பேருந்து நடத்துனரிடம் கொள்ளை

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு 9:30 மணி அளவில் திருவண்ணாமலை நோக்கி கிளம்பிய அரசு பேருந்து இன்று காலை 6:45 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்த போது பேருந்து நடத்துனர் கவுண்டப்பன் தேனீர் சாப்பிட சென்றபோது அவரது பையில் இருந்த பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக பெற்ற பணமான ரூ. 27,300 கொள்ளை போனதாக கோரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News August 19, 2024

பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

image

திமுக நிர்வாகிகளான, பிம்பலூரை சேர்ந்த வனிதா, திருவாளந்துறையை சேர்ந்த மோகன் ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 2023-ம் ஆண்டில் 2 நபர்களிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுள்ளனர். மேலும் வேலை வாங்கி தராததால் பணம் அளித்தவர்கள் வற்புறுத்தலின் பேரில் குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளனர். ஆனால் மீதி தொகை வழங்காததால் திமுக நிர்வாகிகள் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News August 18, 2024

மாரத்தான் போட்டியில் பெரம்பலூர் இளைஞர் அசத்தல்

image

தி பெடரல் மற்றும் வேலவன் ஹைபர் மார்க்கெட் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்‌‌.கலைச்செல்வன் 10 கிலோ மீட்டர் தொலைவில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதக்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

News August 18, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 284 மில்லி மீட்டர் மழை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெரம்பலூர், எறையூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், தழுதாழை, வேப்பந்தட்டை, அகரம், சீகூர், லப்பைகுடிகாடு, புதுவேட்டைகுடி, பாடாலூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 284 மி.மீ. மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 25.82 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

வயலில் மேய்ந்து கொண்டிருந்த இடி மின்னல் தாக்கி பசுமாடு பலி

image

அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கபருநிஷா என்பவர் இன்று மாலை கண்ணன் என்பவரது வயலில் பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுள்ளார் அப்பொழுது திடீரென பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் மூன்று வயது மதிக்கத்தக்க பசுமாடு இடிமின்னல்தாக்கிஇருந்துள்ளது தகவல் அறிந்த மாட்டின்உரிமையாளர்வந்துபார்த்த பொழுது வயலில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

News August 17, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடந்து, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

பெரம்பலூர் அருகே அமைச்சர் அடிக்கல் நாடினார்

image

ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இலந்தங்குழி முதல் ஆலத்தூர்- அரியலூர் சாலை இணைப்பு வரை தார் சாலை அமைக்கும் பணிக்கன பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 17, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 17, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான குறும்படம் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் குறும்படங்களை dsection.tnpmb@gmail.com என்ற இமெயிலில் கூகுள் டிரைவ் இணைப்பாக அனுப்ப வேண்டும். மேலும், குறும்படங்களை நேரில் வழங்கஆட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையரிடம் வழங்கலாம். குறும்படங்களை 16.9.2024 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் நேற்று அறிவித்தார்.

News August 16, 2024

பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர். இதில் கர்ப்பிணிகள், தாய்மார்கள் கை குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இதனிடையே, பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள பாலூட்டும் அறை பூட்டிய கிடப்பதால் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பூட்டிய அறை திறக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.