Perambalur

News August 24, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

image

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சு.ஆடுதுறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் 140 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

பெரம்பலூரில் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் 45,034 பெண்கள் என மொத்தம் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

News August 23, 2024

பெரம்பலூர் டிஎஸ்பி மாற்றம்

image

பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கும், டிஎஸ்பி வல்லவன் சென்னை பெருநகர காவல்துறைக்கும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 23, 2024

பெரம்பலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் வாயிலாக மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இன்று (23.08.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News August 23, 2024

எம்எல்ஏ ஊரில் தண்ணீர் இல்லை என பெண்கள் எம்.பி-யிடம் புகார்

image

பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடியில் இன்று 15 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.12.87 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. மேலும், பணிகள் நிறைவடைந்து இன்று பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பணியை பெரம்பலூர் எம்பி அருண் நேரு தொடங்கி வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் எம்எல்ஏ பிரபாகரன் சொந்த ஊரான தேவையூரில் தண்ணீர் வரவில்லை என்று எம்.பி. அருண் நேருவிடம் முறையிட்டனர்.

News August 23, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை இன்று ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 23, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட பிரச்சார வாகனத்தினை இன்று ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 22, 2024

பெரம்பலூரில் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

image

திருநெல்வேலி வழக்கறிஞர் சரவணராஜா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, குற்றவாளியை கைது செய்யவும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றவும், நாளை ஒருநாள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும், பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக பெரம்பலூரில் இன்று மாலை வழக்கறிஞர் வள்ளுவன் நம்பி தலைமையில் நடந்த, சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News August 22, 2024

குன்னம் வட்டார பகுதிகளில் திடீர் ஆய்வு

image

குன்னம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், மாணவியர்கள் தங்கும் அறை, சமையலறை, இரவு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மற்றும் நீர்வளத்துறை சார்பில் ரூ 1.76 கோடி மதிப்பீட்டில் ஆய்க்குடி ஏரி மதகு புனரமைக்கப்பட்டுள்ளதையும் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளதையும் வரத்துவாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதையும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அட்சியர் ஆய்வு செய்தனர்.

News August 22, 2024

பெரம்பலூர் கிரானைட் குவாரியில் திடீர் ஆய்வு

image

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சித்திளி கிராமத்தில் உள்ள கிரானைட் குவாரியில் குவாரியின் ஒப்பந்த கால அளவு எவ்வளவு, இக்குவாரின் மூலமாக எடுக்கப்படும் கிரானைட் கற்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.