India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (9.8.2025) அன்று நடைபெற உள்ளது. நொச்சியம், தொண்டமாந்துறை, காடூர் (தெற்கு) கொளத்தூர், (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.
BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்திற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள மூன்று புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.
வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்கள் போனில் இருந்தே விண்ணப்பிக்க <
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டின் பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நேற்று கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கோ.இளவரசன் மற்றும் தனியார் கல்லூரியின் மாணவி கற்பகரட்சாம்பிகை என்பவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
பெரம்பலூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூர் மாவட்டத்தில் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.” என அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினை ஊற்ற கரவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் (ம) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025-குள்ள <
Sorry, no posts matched your criteria.