Perambalur

News October 4, 2025

பெரம்பலூர்: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தில் இருந்து காரை செல்லும் வழியில் குப்பளாஞ்சேரி என்னும் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நடுவில் குடிநீர் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றில் குடிநீர் வற்றிக்கொண்டு வருவதால், குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, உரிய நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 4, 2025

பெரம்பலூர்: நான்கரை ஆண்டுகளில் ரூ.24.64 கோடி

image

பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.24.64 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் 22,705 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வெங்காய சேமிப்பு கிடங்கு மட்டும் 2,034 விவசாயிகளுக்கு ரூ.16.51கோடி மதிப்பிலான மானிய உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 3, 2025

பெரம்பலூர் மக்களே! ரூ.1000 வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே! பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் <<>>கிளிக் செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க!

News October 3, 2025

பெரம்பலூர்: மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

image

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 14,17,19-வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான 6 பிரிவுகளாக டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சார்ந்த 240க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

News October 3, 2025

பெரம்பலூர்: டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது மனைவி கவிதா, மூன்று மகன்களுடன், நேற்று திருச்சியில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டு வீடு திரும்பி வரும் பொழுது, பெரம்பலூர் மாவட்டம், எறையூர் பகுதியில் லாரி பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது சுரேஷ் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் இவர்கள் 5 பேரில் 4 பேருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News October 3, 2025

பெரம்பலூர்: குட்கா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் நேற்று (அக்.2) போலீசார் நடத்திய சோதனையில், அரும்பாவூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அன்னமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (67) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்து விற்றது தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 1.800 கி.கி எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

News October 3, 2025

பெரம்பலூர்: நடு இரவில் மர்ம நபர்கள் துணிகரம்

image

அயன் பேரையூர், சமத்துவபுரத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (48) இவர் குடும்பத்தோடு நேற்று முன்தினம் இரவு காற்று வரவில்லை என்று கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் ரூ.30,000-ஐ திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 3, 2025

பெரம்பலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக<<>> தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

பெரம்பலூர்: VOTER ID-ல மாற்றம் செய்யனுமா?

image

பெரம்பலூர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க.
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன்-ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம் ஆப்ஷன்-ஐ தேர்ந்தெடுங்க.
5. புது போட்டோவை பதிவிறக்கம் செய்ங்க.
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 3, 2025

பெரம்பலூர்: கூட்டுறவு சங்கங்களில் பணி வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (11.10.2025) அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!