Perambalur

News February 5, 2025

பெரம்பலூர்: குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று (பிப்.4) அரணாரை, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், லப்பைகுடிகாடு, நல்லறிக்கை போன்ற கிராமங்களில் உள்ள மளிகை கடைகளில் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News February 5, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கைகளத்தூர், ஈச்சங்காடு ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.05) நடைபெற உள்ளது. ஆகவே அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் மைன்ஸ், சிலுப்பனூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் 2:00 வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it now…

News February 4, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட,  சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற 28.02.2025 தேதிக்குள் umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News February 4, 2025

பெரம்பலூர்: கிராம மக்களுக்கு அழைப்பு

image

பெரம்பலூர் அடுத்த புதுநடுவலூர் கிராமத்தில் 12.02.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே புதுநடுவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை புதுநடுவலூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 4, 2025

பெரம்பலூரில் தமிழக அரசைக் கண்டித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பு

image

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞர்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று (பிப்.03) தொடங்கியது. இதில் வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞர்கள் செலுத்தும் ரூ.20 முத்திரைக் கட்டணத்தை, ரூ.100 ஆகவும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

News February 4, 2025

மினி பஸ்கள் இயக்க புதிய வழிமுறைகள் வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ்கள் இயக்க புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீட்டராக இருக்க வேண்டும். குறைந்த பட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது போன்ற வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 237 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 3, 2025

பெரம்பலூர் அரசு பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாளை (பிப்.04) 9 மற்றும்10ஆம் வகுப்புகளுக்கும்; நாளை மறுநாள் (பி.05) 11 மற்றும்12-ஆம் வகுப்புகளுக்கும் என்ன உயர் கல்வி படிக்கலாம் என்பது குறித்து பல்வேறு நுணுக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன.

News February 3, 2025

பெரம்பலூர்: நிர்வாக வசதிக்காக புதிய மின் வாரிய அலுவலகம்

image

பெரம்பலூர் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மின் இணைப்புகள் துறைமங்கலம் பிரிவுக்கு கீழ் வருவதால் அந்தப் பகுதி மின் நுகர்வோர்களின் மின்னிணைப்பு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News February 3, 2025

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் கடத்தபடுவதாக குன்னம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி, போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெட்டிக்குடிகாடு அருகே வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த பாண்டுரங்கன் (46), சூர்யா (24) என்பவர்கள், அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாட்டு வண்டியோடு மணலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

error: Content is protected !!