India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் கூடல் நிகழ்வில் பேச்சாளரும் எழுத்தாளருமான திரு பவா செல்லதுரை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கான சமுதாய பங்கு, மனித நேயம், இயற்கை வாழ்வியல் போன்ற எண்ணற்ற கருத்துக்களை தமது கதைகள் மூலமாக எடுத்துரைத்தார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையை கேட்டு மகிழ்ந்தனர்.
பெரம்பலூர் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலை நாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க…
சென்னையில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஒன்று 23 பயணிகளுடன் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை 12:45 மணியளவில் பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே திடீரென பேருந்து தீ பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிலிருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்பநாய்ப்படைப் பிரிவிற்கு “வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக இன்று “(பிப்-21) புதிதாக மோப்பநாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா நாய்க்குட்டிக்கு “ஜெனி” என்று பெயர் சூட்டினார். இந்நிகழ்வின் போது ADSP T.மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவு DSP காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமிக்கும், கவுல்பாளையத்தைச் சேர்ந்த விஜயா (29) என்பவருக்கும் 2024 டிசம்பர் மாதம் திருமணம் நடந்து, விஜயா தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று விஜயா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணமான 2 மாதங்களிலேயே விஜயா தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து பெரம்பலூர் சப்-கலெக்டர் கோகுல் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், அரசு முதன்மைச் செயலாளர்/ போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர்முன்னிலையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (20.02.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (75) என்பவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். சின்னசாமி கடந்த 17-ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், நேற்று மதியம் காட்டு கொட்டகையில் உள்ள கிணற்றில் சின்னசாமி சடலமாக மீட்கப்பட்டு, பெரம்பலூர் ஊரக போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் வருகின்ற 25ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம்,மதிப்பூதியம், சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டு வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் என அறிவிப்பு.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்) சேர்வதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு எப்படி விண்ணப்பிப்பது?, தகுதிகள், வயது வரம்பு என்ன? என்பது குறித்து <
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு 01.06.2025 நடைபெறவுள்ளது தேர்விற்கு
www.rimc.gov.in இணையவழி மூலமாக கட்டணம் செலுத்தி பெற்ற லாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சாலை பூங்கா நகர் சென்னை 60003 என்ற முகவரிக்கு 31.3.2025 அனுப்பிட வேண்டும் என கலெக்டர் இன்று தகவல்.
Sorry, no posts matched your criteria.