Perambalur

News September 5, 2024

எஸ் பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட எஸ்பி காவல் வாகனங்களை ஆய்வு செய்து அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.

News September 5, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு இளங்கலை சட்டம் படிப்பினை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை தரவேண்டிய கடைசி நாள் 13.09. 2024 ஆகும். விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட எஸ்பி-யடம் விண்ணப்பத்தினை நேரில் அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 5, 2024

விழிப்புணர்வு வாகனைத்தை துவக்கி வைத்த கலெக்டர்

image

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசுப்பள்ளிகளின் மாணாக்கர்களுக்கு விளக்கிடும் வகையில் மாவட்ட மகளிர் அதிகார மைய விழிப்புணர்வு வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், இன்று 05.09.2024 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News September 5, 2024

கால்நடை மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட சிறுவாச்சூர் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் தரம் குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.

News September 5, 2024

பெரம்பலூர் எஸ் பி தலைமையில் மனு விசாரணை முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஸ் நேரடியாக மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டார். முகாமில் 44 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சியில் மண்டல அளவில் 6.9.2024 அன்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் 15 டி மெக் டொனால்டு ரோடு கண்டோன்மெண்ட் (மத்திய பேருந்து நிலையம் அருகில்) நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு | மாற்றுத்திறனாளி நல அலுவலக எண் 04328-225474 அழைக்கவும் என இன்று கலெக்டர் தகவல்.

News September 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊராட்சி அளவில் போட்டிகள் 9.9.2024 முதல் 12.9.2024 வரை நடைபெற உள்ளது. வட்டார அளவில் 16.9.2024 முதல் 20.9.2024 வரை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் 25.9.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 96599 35852 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள, நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அங்கிருந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவிகளிடையே உரையாடினார். இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News September 4, 2024

பெரம்பலூர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்க தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் மற்றும் கடைசி தேதி ஆகியவற்ற கீழ்கண்ட இணைய முகவரியில் https://districts.ecourts.gov.in perambalur பார்க்கலாம்.

News September 4, 2024

பெரம்பலூரில் இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

image

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் கிளையின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் இலவச சணல் பை தயாரிக்கும் பயிற்சி வகுப்பு செப் 9 ஆம் தேதி தொடங்கி 13 நாட்கள் நடைபெறும். எழுதப் படிக்க தெரிந்த கிராம பஞ்சாயத்தை சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான பயிற்சி நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.