India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின்,நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ், “உயர்வுக்குப் படி”, +2 படித்து, உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்களின் கல்லூரி கல்வியை உறுதி செய்யும் வகையில் 2-கட்டங்களாக உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக செப்-10,பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை -9 மணிமுதல் 5- மணிவரை நடைபெறவுள்ளது, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சி பகுதியில், அரசின் திட்டங்களில் பயனடைந்தவா்களைச் சந்தித்து திட்டங்களின் பயன்பாடு குறித்த நேற்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கேட்டறிந்தார். அப்பொழுது அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இதுவரை 4,551 மாணவிகள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல் போன்ற திட்டங்கள் குறித்து விளக்கும் வகையான நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, இணையதள முகவரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று (06.09.2024) வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன் அடைந்த குரும்பலூர் கல்லூரி மாணவர்களின் இல்லத்திற்குச் சென்று திடீர் ஆய்வு செய்து மாணவர்களிடம் திட்டத்தை கேட்டறிந்தார். இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நாங்கள் நன்றாக படிக்கிறோம் என்று மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். படிப்பு சம்பந்தமாக என்ன உதவி வேண்டுமானாலும் மாவட்ட ஆட்சியரை அணுகலாம் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 10.09.2024 அன்று காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செயற்பொறியாளர் அசோக்குமார் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நாளை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செப்டம்பர் ஐந்தாம் தேதி இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த கல்லூரி மாணவனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்துக்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கேட்டறிய உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செப்டம்பர் 5 ஆம் தேதி நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பு அலுவலர், காவல் வாகனங்களை ஆய்வு செய்து காவலர்களுக்கு அவற்றை பராமரிப்பது குறித்து அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் முன்னிலையில் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தும், புலன் விசாரணை முடியாமல் நிலைமையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாடாலூர் கால்நடை மருந்தக கட்டடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்து சுற்றுச்சுவர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் மூலமாக விரைந்து பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கால்நடைத்துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தினார்.
1998ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில், 70 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து, அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 70 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், விடுதலைக்கு சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கு தமுமுக மற்றும் மமகவினர் பாராட்டு தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.