Perambalur

News March 6, 2025

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (60) நேற்று முன்தினம் எறையூரில் இருந்து கல்லை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நன்னை கிராமம் அருகே எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

News March 5, 2025

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் தந்தை ஹேன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூர் சுற்றுவட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 5, 2025

மக்கள் தொடர்பு திட்ட முகாம் குறித்த அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், மாவிலங்கை கிராமத்தில் 12ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களின் தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, மாவிலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவிலங்கை VAO அலுவலகத்தில் முகாம் நடைபெறுவதற்கு முன்பே அளிக்குமாறு ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மாவிலங்கை கிராமத்தில் வரும் மார்ச்.12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தற்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் பணி நடைபெற்று வருகின்றது. ஆலத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 4, 2025

நண்பர்களுடன் ஏரியில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

image

பெரம்பலூர் அருகே உள்ள பேரலி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்ததால் காலை வகுப்பு இல்லாத நிலையில், நண்பர்களுடன் ஒதியம் பாதையில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது ஆழமான இடத்தில் மூழ்கியுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News March 3, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய நில அளவை கட்டணம் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen போர்டல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் இன்று தகவல்.

News March 3, 2025

உழவர்களின் கனிவான கவனத்திற்கு

image

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

News March 3, 2025

பெரம்பலூரில் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர், இடைத்தரகர் கைது

image

பெரம்பலூர், ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்த அவரது நண்பரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மூலம், வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.25,000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் சிவக்குமார்(54) மற்றும் இடைத்தரகர் ராம்குமார் (38) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

News March 2, 2025

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு உரிய காலத்தில் பணப்பட்டுவாடா – ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பால் உற்பத்தியாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!