Perambalur

News September 15, 2024

பெரம்பலூரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

image

பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். இதில் நிறுவனத் தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செயலர் முனைவர் மித்ரா முன்னிலை வகித்து ஓணம் பண்டிகையின் சிறப்பை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் வண்ண வண்ண பூக்களால் கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News September 15, 2024

பெரம்பலூரில் குறும்பட போட்டி: ஆட்சியர் அழைப்பு

image

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெறும் குறும்பட போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10000, 2 ஆவது பரிசாக ரூ. 7000, 3 ஆவது பரிசாக ரூ. 5000 வழங்கப்படும். 5 நிமிடத்துக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.

News September 14, 2024

பெரம்பலூர்: 16 மையங்களில் 5,938 நபர்கள் தேர்வெழுதினர்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி 2 மற்றும் 2A தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் நேரில் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வினை 5,938 நபர்கள் தேர்வெழுதினர்.

News September 14, 2024

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு

image

குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வரும் 18ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்குமாறு கலெக்டர் நேற்று அறிவித்தார்.

News September 14, 2024

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.

News September 13, 2024

திம்மூரில் சாலைப்பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, திம்மூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹96.37 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் முதல் கண்ணனூர் வரை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் தொடர்பாக இன்று 13.09.2024 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 13, 2024

ஜமீன் பேரையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஜெமின் பேரையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹.13.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் வளர்க்கும் நாற்றாங்கால் மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 13.09.2024 பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News September 12, 2024

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடி இடங்கள் சில பழுதடைந்து இருப்பதால் மாற்றி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இதில் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு மனு முகாமில் 53 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் என பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 11, 2024

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவில் உதவி கணினி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க +2 அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்படுவர். இப்பணிக்கு வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.