Perambalur

News March 11, 2025

கீழப்பெரம்பலூர்: புதிய நியாயவிலைக்கடை திறப்பு

image

வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ரூ. 12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (மார்ச்-11) தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 11, 2025

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த அமைச்சர்

image

குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், கீழப்பெரம்பலூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூபாய் 36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பாடு அறையுடன்  கூடிய 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News March 11, 2025

பசும்பலூர்: வரலாறு புதைந்து கிடக்கும் பசு-உரையும்-கல்

image

நாடு விடுதலை அடைந்ததின் நினைவாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் மகன் ஆறுமுகம் பிள்ளை அவர்களால் பசும்பலூர் பேருந்து நிலையத்தில் நடப்பட்டுள்ள பசு உரையும் கல். இக்கற்கள் ஆவுரிஞ்சிக் கல்,பசு உரையுங் கல் என அழைக்கப்பட்டது. இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.பெரம்பலூர் (மா) சிறுவாச்சூர் ,பொம்மனப்பாடி பிற பகுதிகளிலும் காணப்படுகிறது. உங்க ஊர் பெருமையை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 10, 2025

ஆலத்தூர் தாலுகாவில் மக்கள் தொடர்பு திட்ட முகம்

image

ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை கிராமத்தில், வருகிற 12ஆம்தேதி புதன்கிழமை, மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

News March 10, 2025

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 381 மனுக்கள் பெறப்பட்டது.

News March 10, 2025

பெரம்பலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு- இன்றே கடைசி நாள்

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 10, 2025

வேப்பந்தட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி படுகாயம்

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கொட்டாரக்குன்று கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கதுரை(37) என்பவர் தனது விவசாய நிலத்தில் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு வெடிகுண்டு வைக்கும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தங்கதுரை படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

பெரம்பலூர்: 332-பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் நேற்று (08.03.2025) தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 332 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்த நிகழ்வின்போது பெரம்பலூர் எம்.பி அருண்நேரு மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News March 9, 2025

பெரம்பலூரில் பறவைகள் கணக்கெடுப்பு

image

தமிழ்நாடு வனத்துறை, பெரம்பலூர் வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு-2025 நடைபெற உ‌ள்ளது. அதன்படி ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று மற்றும் இன்றும் (மார்ச்.8,9); நிலம்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 15, 16ம் தேதிகளிலும் நடைபெற உ‌ள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் 7904695995, 9597837928 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 48.46 கோடி 

image

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட உலக மகளிர் நாள் விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அந்நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேரலையில் கண்டு பின், மாவட்டத்தில் உள்ள 658 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 48.46 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.

error: Content is protected !!