India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் ஆக.22ம் தேதி பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதுர காளியம்மன் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக 19,436 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பரவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (55), வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்தார். வேப்பூரில் பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
பெரம்பலூரில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார். மேலும், களி மண்ணால் செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.