India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 மக்களவை தேர்தலில், I.N.D.I.A கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் பயணம் மேற்கொண்ட அருணுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம் தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த ஐஜேக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நேரடியாக திமுக வேட்பாளர் அருண் நேருவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ள சந்திரமோகன் என்பவர் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக – திமுக நேருக்கு நேர் போட்டி உருவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுக கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாட்டம். வருகின்ற 24ம் தேதி திருச்சியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும் எனவும் தகவல்.

பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் மக்களவை தொகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தஞ்சாவூரை சேர்ந்த தேன்மொழியும், சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளராக பெரம்பலூரை சேர்ந்த ஜான்சி ராணியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.