India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய நில அளவை கட்டணம் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen போர்டல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் இன்று தகவல்.
தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
பெரம்பலூர், ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்த அவரது நண்பரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மூலம், வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.25,000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் சிவக்குமார்(54) மற்றும் இடைத்தரகர் ராம்குமார் (38) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகளை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உரிய காலத்தில் பணப்பட்டுவாடா செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பால் உற்பத்தியாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு திருச்சி நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணியிடம் இருந்து ₹77 லட்சம் பணம் பறிமுதல். சோளம் விற்ற பணத்தை எடுத்துவருவதாக பிடிபட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் குமார் விசாரணையில் கூறியுள்ளார். ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் <
அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.10,000 – 29,380 வரையிலான மாதச் சம்பளத்தில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, <
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலை வாய்ப்பு மையமும் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைஅறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. விருப்பம் உள்ளவர்கள் <
குன்னம் தொகுதி, திருமாந்துறை ஊராட்சியில் ரூ. 27.25 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை இன்று (பிப்-27) தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்,மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்,இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.