Perambalur

News April 1, 2024

பெரம்பலூர் வரும் பிரதமர் மோடி..?

image

டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது, பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மக்களின் கனவு திட்டமான பெரம்பலூர் ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

News April 1, 2024

பெரம்பலூர்: லாரி விபத்தில் ஆசிரியர் பலி!

image

குன்னம், அசூர் கிழக்கு தெருவை, சேர்ந்த சூர்யா (20) இவர் ஓட்டுநர் வேலை செய்து வரும் நிலையில் டிப்பர் லாரியில் 4 ரோடு அருகில் உள்ள, சூர்யா ஏஜென்சில் ஜல்லி ஏற்றிக்கொண்டு ஆலம்பாடி நோக்கி சென்று கொண்டுள்ளார்.டிப்பர் லாரியை கவனக்குறைவாக ஒட்டி சென்றதால், எதிரே உள்ள தனியார் உணவு விடுதி முன்பு நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஜூனோஜா 31, என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 1, 2024

பெரம்பலூர்: லாரி மோதி விபத்து – ஆசிரியர் பலி

image

பெரம்பலூரைச் சேர்ந்தவர் அன்மோல் ஜீனோஜா, தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், லாரி அருகில் இருந்த ஷேர் ஆட்டோவில் மோதி நின்றது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News March 31, 2024

களப்பணியாற்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

image

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்லதுரை தலைமை வகித்தாா். இதில் பெரம்பலூா், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர களப்பணியில் ஈடுபடுவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

News March 31, 2024

பெரம்பலூர் தேர்தல் களத்தில் 23 வேட்பாளர்கள்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறுகிறது. வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு , அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பாஜக வேட்பாளர் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி என 5 தேசிய/மாநில கட்சி வேட்பாளர் உட்பட 18 சுயேட்சை என மொத்தம் 23 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.

News March 30, 2024

பெரம்பலூரில் நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம்

image

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

News March 30, 2024

பெரம்பலூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை பிரச்சாரம்!

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

News March 30, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டசிறப்பு பேரவை கூட்டம்

image

துறைமங்கலம் 3ரோடு பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் நிதியளிப்பு மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி நிர்வாக்கள்தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் ரமேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

News March 29, 2024

கலக்கும் பெரம்பலூர் வீரர்கள்

image

பெரம்பலூர்: மேலப்புலியூர் கலைசெல்வன்,
ஆதனூர் ஜுவா , மங்கலமேடு அம்பிகா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய மாற்றுத்திறனாளி வீரர்கள் 2024 மார்ச்-30 அன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் செல்லவுள்ளனர்.  இதில் வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன் மற்றும் ஆதனூர் ஜீவா பெரம்பலூர் முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலரிடம் வாழ்த்துகள் பெற்றனர். 

News March 29, 2024

பெரம்பலூர்: வியாபார சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்

image

மக்களவை தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று(மார்ச் 29) வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வியாபாரி சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துரைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

error: Content is protected !!