Perambalur

News May 7, 2024

பெரம்பலூரில் மஞ்சள் எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதனால் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும், இன்று(மே 7) ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

பெரம்பலூர்: மாணவர்களை ஓவர்டேக் செய்த மாணவிகள்!

image

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று(மே 6) வெளியான நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 6,752 தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3342 மாணவர்களும், 3410 மாணவிகளும் ஆவர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.51% , மாணவியர்கள் தேர்ச்சி சதவீதம் 97.37%. மாணவிகளே இந்த வருடமும் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 7, 2024

விவசாயிகளுக்கு அரசு பேருந்தில் இலவசம்

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் அவர்களுடைய விளைநிலங்களில் உற்பத்தி செய்த காய்கறிகளை பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு எடுத்து வருவதற்கு அரசு பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வணிகம் துறையால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்

News May 6, 2024

பெரம்பலூர் : மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் k.கமலி மற்றும் செனிதா என்ற இரண்டு மாணவிகளும் 593/600 முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியம் இனிப்பு வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

News May 6, 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு பயிர்களுடன் ஆர்ப்பாட்டம்

image

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், மங்களமேடு EB – SS பழுதானதால் ஒரு வார காலமாக தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த மக்காசோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மக்காசோளம், கடலை பயிர்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News May 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பெரம்பலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 6, 2024

+2 RESULT: பெரம்பலூரில் 96.44% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 96.44% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.51 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 97.37 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

பெரம்பலூர்: போராட்டம் குறித்த விளக்க வாயிற் கூட்டம்

image

பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ சங்கம் சார்பில் நேற்று(மே 5) வாயிற் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் மகேந்திர குமாரை கண்டித்து வரும் 14ம் தேதி மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

News May 5, 2024

பர்னிச்சர் கடை குடோனில் தீ விபத்து

image

பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள பர்னிச்சர் கடையின் குடோனில் இன்று 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டில், டைனிங் டேபிள் சோபா, ஃபர்னிச்சர் வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இடத்திற்கு விரைந்து வந்த,  தீயணைப்புத் துறை 2 மணி போராடி தீயை அனைத்து வந்தனர். 

News May 5, 2024

முதியவர் மீட்டு சிறப்பு இல்லத்தில் சேர்ப்பு

image

பெரம்பலூர் வட்டம், துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் சுமார் 75 வயதுடைய பெயர் மற்றும் முகவரியையும் சரியாக சொல்ல தெரியாத ஆதரவற்ற முதியவர் ஒருவரை நேற்று மாவட்ட சமூக நலத்துறை மூலம் மீட்டு
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம்,
உதிரம் நாகராஜ், மகேஸ்குமரன் ஆகியோர் உதவியுடன் சிறப்பு இல்லத்தில் சேர்த்தனர்.

error: Content is protected !!