India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர், உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றங்கரையில் உள்ள வாலீஸ்வரர் கோயில் சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. வாலி வழிபட்டதால் இது வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாக திகழ்ந்துள்ளது. பிரதோஷ காலங்களில் இங்கு சென்று வழிபட்டால் சங்கடங்கள் விலகி மனவலிமை பெறலாம் என்பது ஐதீகம் சிவ பக்தர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க
கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்- I, தீயணைப்பாளர், டோப்பஸ்பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <
பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு 22.03.2025 மற்றும் 23.03.2025 ஆகிய நாட்கள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி என பெற தகுதி உள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம் மேலும் தகவலுக்கு 9445029470 எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம் ஜி ஆர் நகர் பகுதியில் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (30) என்ற ஆண் ஒருவர் வாடகை குடியிருப்பு வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நிலையில், மது போதையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வருகிறது.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (19.3.2025) நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 19.3.2025 அன்று நடைபெற உள்ளது பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து,பொதுமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை இன்று (17.03.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.