Perambalur

News June 3, 2024

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

image

கடலூர், கோழியூரை சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் நேற்று சொந்த ஊர் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்ற போது, கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, ஒரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் வந்த 3 சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News June 2, 2024

இளைஞர்களுக்கு கேமரா பழுது நீக்கல் பயிற்சி முகாம்

image

பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள IOB வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் கிராமம் (ம) நகர்ப்புற இளைஞர்களுக்கு கண்காணிப்பு கேமரா பழுது நீக்கல் பயிற்சி ஜூன் 6ஆம் தேதி முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சேர விரும்பும் 19 -45 வயதுடைய ஆண்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை, கல்விச் சான்றுடன் ஜூன்.3 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

பெரம்பலூர் இளைஞர் அசத்தல்

image

ஈரோடு மாவட்டம் பவானி தனியார் பள்ளி சார்பில் தாளாளர் சின்னசாமி ரேணுகாதேவி முன்னிலையில் இன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவுக்கு மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்து விழா குழுவினரிடம் சான்றிதழ் பெற்றார்.

News June 2, 2024

காமராஜர் விருது பெற்ற அரசு பள்ளிகள்

image

2023-24ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெற்ற பள்ளிகளுக்கு நேற்று முதன்மை கல்வி அலுவலர் (கூ‌பொ) பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை ரொக்க பரிசு விருதுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News June 2, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூரில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

பெரம்பலூரில் மழை

image

பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், எளம்பலூர் சாலை, நான்கு ரோடு, துறைமங்கலம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 1, 2024

குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பித்து பெற வேண்டும்

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் (ம) பாதாள சாக்கடை குழாய் இணைப்புகளும் (ம) குழாய்களின் பழுது சீரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளை நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தி நகராட்சி பணியாளர்கள் மூலம் பணிகளை செய்து கொள்ள வேண்டும். வெளி ஆட்களை கொண்டு தன்னிச்சையாக செயல்படுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா

image

பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (ம) சென்னை பாவை பவுண்டேஷன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்துக்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊ.ஒ.தொ. பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி மே.20 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் (ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

News May 31, 2024

பெரம்பலூர் இன்று மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூரில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்த கலெக்டர் அலுவலகம் 

image

பெரம்பலூரில் ஆண்டுதோறும் மே மாதம் 30-ஆம் தேதி சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினமாக அனுசரிக்கப்படுவது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திசு பன்முக கடினமாதல் தினத்தை முன்னிட்டு மே.30ஆம் தேதி இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. இதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.  

error: Content is protected !!