India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பெரம்பலூர், முருகன்குடி அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியதில் 8 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு இன்று காலை கலெக்டர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார், தொடர்ந்து காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து ஆலம்பாடி ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகா பாலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மருதராசு. இவர் தோட்டத்தில் பெரம்பலூர் ஆல் இந்தியா சில்ட்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீ ராமு ஏற்பாட்டில் அரியலூர் கெனான் இயற்கை தேன் வளர்ப்பு மையத்தின் திரு ஆழ்வார் அவர்கள் தேனி வளர்ப்பு மற்றும் தேன் சேகரிப்பு விளக்கப் பயிற்சியினை அளித்தார். கீழப்புலியூர் வாலிகண்டபுரம் பிரம்மதேசம் விவசாயிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். புதிய வகை பட்டுப்புடவைகளின் ரகங்கள் மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட சட்டைகள், நைட்டிகள், திரைசீலைகள் உள்ளிட்டைகளின் தரம் குறித்து அப்போது அவர் பார்வையிட்டார்.
பெரம்பலூரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் கோருபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். வருகிற 20/10/2024-க்குள் விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பிக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஆராய்ச்சி உதவி திட்டத்தின் கீழ் முழு நேரம் மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதென பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையம், தெரணி கிராமத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு, மணி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான தனபால், குண்டுபிரபு (எ) பிரபு, பழனிவேல், சங்கர் ஆகியோருக்கு நேற்று பெரம்பலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் கூடிய தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (30.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்)அனைத்து மதுபான சில்லறைக் கடைகளும், அவைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள், மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்தும் அக்-02 காந்தியடிகள் பிறந்த தினமான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.