India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஷ்யாம்ளா உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.07.2024 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் மத்திய அரசு நீர் வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து பல்வேறு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது சார்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பெற்றுதர பரிந்துரை செய்கிறோம் என கூறினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் சென்னை வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி 16 ஆவது புதிய ஆட்சியராக கிரேஷ் லால்ரின் டிகி பச்சாவ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராக கற்பகம் பணிபுரிந்த நிலையில், ஆட்சியர் மாற்றம் செய்து தமிழக அரசின் உத்தரவிட்டது. அதன் பேரில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ் இன்று மாலை 5.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், எளம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி ஆகிய கிராமங்களுக்கு 19-ஆம் தேதி வெங்கடேஸ்வரா மஹாலிலும், செங்குணம், அய்யலூர், கல்பாடி, கவுல்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு வரும்-23 ஆம் தேதி கவுல்பாளையம் அன்னை மண்டபத்திலும், லாடபுரம், மேலப்புலியூர், களரம்பட்டி கிராமங்களுக்கு 24-ஆம் தேதி மேலப்புலியூர் நாயுடு சங்க கட்டிடத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.