India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடிச் சேர்க்கை 1.7.2024 முதல் 31.7.2024 வரை நிறைவு பெற்ற நிலையில், தற்போது 16.8.2024 வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தை உபயோகிக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை காலை 10மணியளவில், எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில், அமைதிப்பேரணிச் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வும், முன்னதாக மாவட்ட திமுக அலுவலகத்தில் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதன்படி பெரம்பலூர் 6 மி.மீ, தழுவாழை 37 மி.மீ, பாடாலூர் 7 மி.மீ, செட்டிகுளம் 15 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 65 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 5.91 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,06,434 மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

காரை கிராமத்தைச் சார்ந்த மாரிமுத்து என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க வேலை வேண்டி மனு அளித்தார். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காக நேர்காணல் வரை சென்றும் என் நிலைமையை பார்த்து யாரும் வேலை தரவில்லை எனக்கு துப்புரவு பணியாளர் வேலையாவது நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் முதன்மை கல்வி அலுவலர் சு.சுகானந்தம் அவர்களை 5-8-2024 அன்று மாலை சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் பங்கேற்றார்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து, வரும் 05.08.2024 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் அனைத்து தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை போட்டுக்கொண்டு,இக்கொடிய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அடுத்த மலையப்ப நகர் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் முன்னே சென்ற டேங்கர் தண்ணீர் லாரி மீது சென்னையிலிருந்து நாட்டரசன் கோட்டைக்கு சென்ற தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.