India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024-2025 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையம் (ம) சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகுதியுடைய மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மே 10, 11ம் தேதிகளில் பெரம்பலூரில் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. விடுதியில் மாணவர்கள் சேர்வதற்கு மே 8ம் தேதி வரை www.sdat.tn.gov.in விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தளத்தில் மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் எசனை ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் அக்னி சட்டி மற்றும் அழகு குத்துதல் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இன்று(30ஆம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மன் அருள் பெற்று எசனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தமிழகக் கட்டிட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் இன்று
இலவச சட்ட விழிப்புனர்வு முகாம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர் குறித்து எடுத்துரைத்து பேசினார்.
இதில் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களுக்கு 4 நாட்கள் அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உச்சி வெயில் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.
பெரம்பலூரில் அமைந்துள்ள கிபி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஞ்சன்குடிகோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின் ஆற்காடு நவாப் வழி வந்தவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கற்கோட்டையான இதில் 3 அடுக்கு அரண்களும், மாளிகை, குடியுருப்பு கட்டடங்கள், மசூதி, சுரங்க அறைகள் ஆகியவை உள்ளன.
பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் 7 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மாவிலங்கை கிராமத்தில் சின்னச்சாமி என்பவரின் குடும்பத்தினர் விவசாய தோட்டத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(ஏப்.28) காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்ற பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துச் சென்றனர். சம்பவம் குறித்த புகாரில் பேரில் கை களத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூர், அண்ணா நகர் கிராமம் பூச்சொரிதல் திருவிழா முன்னிட்டு திருக்களம்பூர் விளையாட்டு மைதானத்தில் இன்று மது ஒழிப்பு விழிப்புணர்வுக்கான 5 கி.மி தொலைவுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளி நபர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினார்
Sorry, no posts matched your criteria.