Perambalur

News August 17, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 17, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பிலான குறும்படம் போட்டி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் குறும்படங்களை dsection.tnpmb@gmail.com என்ற இமெயிலில் கூகுள் டிரைவ் இணைப்பாக அனுப்ப வேண்டும். மேலும், குறும்படங்களை நேரில் வழங்கஆட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையரிடம் வழங்கலாம். குறும்படங்களை 16.9.2024 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் நேற்று அறிவித்தார்.

News August 16, 2024

பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர். இதில் கர்ப்பிணிகள், தாய்மார்கள் கை குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இதனிடையே, பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள பாலூட்டும் அறை பூட்டிய கிடப்பதால் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பூட்டிய அறை திறக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

News August 16, 2024

பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

image

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.

News August 16, 2024

பட்ட – பட்டைய படிப்புகளில் சேர கலெக்டர் அழைப்பு

image

தாட்கோ சார்பாக தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த பி.எஸ்.சி. விருந்தோம்பல் ஓட்டல் பட்டப்படிப்பு, உணவு தயாரிப்பு பட்டய படிப்பு, மிட்டாய் துறையில் பட்டயப்படிப்புபில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

ஆலத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் எம்பி அருண் நேரு, எம் எல் ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

News August 15, 2024

பெரம்பலூரில் மரக்கன்றுகளை நடும் பணி

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் எம்பி அருண்நேரு, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் இன்று பாடாலூரில் தொடங்கி வைத்தனர். இதில் வேம்பு, புளி மகிழம் நீர்மருது நாவல் இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.

News August 15, 2024

பெரம்பலூர்: பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை

image

பெரம்பலூரில் நேற்று புதிதாக பதவியேற்ற எஸ்பி ஆதர்ஸ் பச்சேரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவார்கள். போதை பொருள் விற்பனை, கடத்தல் சம்பவம் தடுக்கப்படும் என தெரிவித்தார்.

News August 15, 2024

பெரம்பலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு

image

தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து டிஎஸ்பி வளவன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விதிகள், குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

குறு சிறு (ம) நடுத்தர தொழில் பிரிவுகளுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 19.8.20 24 முதல் 06.09.2024 வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக திருச்சி கிளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் வருகை தந்து தொழில் கடன் மற்றும் அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 0431- 2460498, 9443110899 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

error: Content is protected !!