India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் பரணிதரன்(14), 9ம் வகுப்பு படித்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தொண்டமாந்துறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக பரணிதரன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனை ராஜகோபால் கண்டித்ததனால் கோபித்துக் கொண்ட பரணிதரன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் வெண்மணி சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனபால் என்பவர், பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தில் தங்கி கம்ப்ரசர் மோட்டார் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 8:30 மணியளவில் காரை பிரிவு ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்கும் போது, தேனியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த 27ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல் குளத்தில் ‘நீந்த கற்றுக்கொள்’ என்ற திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கான கட்டணமாக ரூ.1,500 மற்றும் 18 சதவீதம் GST நிர்னயக்கப்பட்டுள்ளது, இந்த நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழு தகவல்களை <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளமாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 31.03.2025 வரை செல்லத்தக்கதாக பண்படுத்தலாம் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.