India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை இன்று (07-09-2025) ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டார். நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பால்ராஜ் இன்று 7 /9 /2025 காலை 9.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் ரவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சக காவலர்கள் பொறுப்பேற்ற ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. அதிகாரப்பூர்வ <
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்களுக்குநிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 04.00மணி வரை விண்ணப்ப படிவங்களை பெறலாம். கல்வி தகுதி 10 ஆம் தேர்ச்சி. வயது வரம்பு 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9894476223, 7092534474 , நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு உடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து செப்.,29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04328-224744 அணுகலாம். SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பர்னிச்சர்கள் மற்றும் பழைய காகிதங்கள் எரிந்து சாம்பலானது. செப்டம்பர் 5 மாலை மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கல்லைகழகல்த்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில் அந்த காணொலி பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் நேரலை காணொலி நடைபெற்றது. இந்த காணொலியை சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் கண்டு களித்தனர்.
Sorry, no posts matched your criteria.