Perambalur

News July 15, 2024

காமராஜர் பிறந்த நாள் விழா

image

காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட தலைவர் ஆர்.வி.ஜே. சுரேஷ் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7,500 மதிப்பிலான சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 522 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

News July 15, 2024

காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்

image

குன்னம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் ஒன்றியம், பெரிய வெண்மணி கிராமத்தில் அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலை பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

3,291 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 263 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 45 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,291 மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.

News July 14, 2024

சென்னை மாரத்தான் போட்டி: ‌பெரம்பலூர் வீரர் மூன்றாம் இடம்

image

சென்னை தீவுத் திடல் பகுதியில் இன்று தமிழ்நாடு மாரத்தான்-2024 போட்டி 5 & 10 கிமீ தொலைவு என 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 10 கிமீ தொலைவுக்கான போட்டியில் ‌பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் சு.கலைச்செல்வன் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு விழா குழுவினர் பரிசுத்தொகை மற்றும் பதக்கத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News July 14, 2024

பெரம்பலூரில் 871 பேர் தேர்வு எழுத வரவில்லை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் அரசுப்பணியாளர்கள் தேர்வணையம் மூலம் குரூப் 1 தேர்வில் முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 2,687 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,816 பேர் தேர்வு எழுதிய நிலையில் 871 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News July 14, 2024

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 2024 – 25 ஆண்டிற்கான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருத்தகத்தினை அனுகலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

குரூப் 1 தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I தேர்வு இன்று (ஜூலை-13) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி மையத்தினை கலெக்டர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி I தேர்வெழுத 2,687 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,816 நபர்கள் தேர்வெழுதினர். 

News July 13, 2024

பெரம்பலூர் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை

image

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தொகுதி வாரியாக அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் 4ஆவது நாளான இன்று காலையில் சிதம்பரம், மதுரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் மதியம் பெரம்பலூர் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

News July 13, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்து அதற்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!