India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 54 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் (PACCS -MSC) திட்டத்தின் கீழ் டிராக்டர் ரோட்டா வேட்டர் உழவு கலப்பை பவர் ட்ரில்லர் விதைப்பு கருவிகள் வைக்கோல் சுற்றும் இயந்திரம் என 34 வேளாண் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 31 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கம் மூலம் வாடகை மையம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. இதனால், இல்லத்தரசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இருப்பு பெறப்பட்டவுடன் ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம்பருப்பினை ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைத்து வகை உதவி உபகரணங்கள் பெற தகுதி உடையவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம் பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜூலை 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தாலுகா, எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இன்று வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ பிரபாகரன், மா.சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதாப் குமார், மற்றும் பலர் உடனிருந்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு 50 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பெரம்பலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூா், பூலாம்பாடி, குன்னம் வட்டத்தில் அகரம் சீகூா், கோவில்பாளையம், காடூா் ஆகிய 5 இடங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இதன் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் மொத்தம் 184.81 ஏக்கர் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கற்பகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.