India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை நாவலூர் கிராமத்தில் இரண்டாவது பாலத்தில் சுந்தர்ராஜன், மணிகண்டன், கரிகாலன், உமா மகேஸ்வரன் ஆகிய நான்கு நபர்கள் அமர்ந்திருந்தவர்கள் மீது பால் வண்டி மோதியதில் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மூன்று பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 அன்று நடைபெற உள்ளது. வேலை நாடுபவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இணையதளத்தில் அக்.15க்குள் விண்ணப்பிககுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், (http://scholarships.gov.in) சந்தேகமேதும் இருப்பின் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் ஏறாதவர்களின் பட்டியல் செங்குணம் வி.எ.ஓ அலுவலக கட்டிடத்தில் தகவலுக்காக ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தற்போது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் E-KYC எனப்படும் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 10.10.2024 வழங்கினார்.
பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு சிறை தண்டனை. பெரம்பலூா், அயனாபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட பெரியசாமிக்கு 3 ஆண்டும், வரதராஜ், பொன்னுசாமி, மணிவேல், சுப்ரமணி, பச்சமுத்து, அந்தோணிசாமி, ராஜாராம் ஆகிய 7 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடா்புடைய 5 போ் உயிரிழந்துள்ளார்.
வேப்பந்தட்டை கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அரும்பாவூர் காவல்துறையினர் இன்று சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் வேப்பதட்டையை சேர்ந்த ஆபிரகாம் (35) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தார். மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பேறுகால இறப்புக்கான காரணங்கள் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 31 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.