Perambalur

News July 12, 2024

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – சிவசங்கர்

image

பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் 20,000 பேருந்துகள் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 7,500 பேருந்துகள் வாங்கி அதில் 600 க்கும் மேற்பட்டோர் பணியமர்த்த உள்ளனர். இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தாமலேயே கழகத்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறினார்.

News July 12, 2024

ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மலையாளபட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய 3 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை ஜூலை.15 க்குள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் ஜூலை 13ம் தேதி நொச்சியம், அயன் பேரையூர், கீழப்புலியூர், திம்மூர் ஆகிய கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News July 11, 2024

பேச்சுப் போட்டியில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஜூலை.30 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை.31 அன்று பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முற்பகல் 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News July 11, 2024

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 11, 2024

விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினை ஊக்கப்படுத்தி தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விவரங்களை நிரப்பி தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆக.08 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனங்கள் ஏலம்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 17-இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2-நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19-வாகனங்கள் வருகின்ற ஜூலை-13 ஆம் தேதி காலை 10-மணியளவில் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9498159193, 9498158918 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் ராஜினாமா

image

பெரம்பலூரில் சிட்டிங் எம்பியான இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு 1,61,866 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.  இந்நிலையில் அக்கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயசீலன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஐஜேகே தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பேற்று  பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

News July 10, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம் நாளை(ஜூலை.11) முதல் செப்.14 வரை நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக சிறுவாச்சூர், புதுநடுவலூர், வேலூர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மின்சார வாரியம், கூட்டுறவு, சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

பயிர் காப்பீடு; ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் காரீப் பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் ஷீமா ஜெனரல் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய உரிய சான்றிதகளுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!