India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் ஊறல் போடுதல் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராய ஊறல் எங்காவது பதுக்கப்பட்டுள்ளதா, மேலும் விற்பனை செய்யப்படுகிறதா என்று மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தனசேகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, வாழை, மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் அனைவரும் அருகிலுள்ள வேளாண் நிலையத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.225 முதல் ரூ.3460 வரை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மத்திய அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறுபவை குறித்து உங்கள் கருத்து?
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது பெரம்பலூர் மாவட்டச் சேர்ந்த சித்ரா, கணேசன் மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதனால் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘பாா்வோ வைரஸ்’ நோய் பாதிப்பால், பெரம்பலூா் மாவட்டத்தில் ரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருகின்றன. இந்த வைரஸ், 1 வயதுக்குள்பட்ட நாய் குட்டிகளை மட்டுமே அதிகளவில் தாக்கும். இது நாய் குட்டிகளின் உடலில் நோய் எதிா்ப்பு மண்டலத்தை தாக்கி செயலிழக்க செய்வதால், குட்டிகள் ஓரிரு நாள்களில் சோா்ந்து உயிரிழந்துவிடும். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள், திருச்சி மாவட்டத்தில் (ஜூலை 20 மற்றும் 21) ஸ்ரீரங்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையின் மகளிர் அணி ஒரு தங்கம், 4 வெள்ளி, 3வெண்கல பதக்கங்களை பெற்றனர்.
பெரம்பலூர் காரியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த போலீசார் விசாரணை செய்ததில் தனக்கு அழகுவேல் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கு காரணமாக இருந்த அவர்கள் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் குறவர்கள் இன மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே எங்கள் பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் மனு கொடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.