India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெருவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா எம்.பி, அருண்நேரு எம்.பி, மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக க.கற்பகம் பணி செய்து வந்தார். இவர் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட புதிய ஆட்சியராக கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள, குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை சூலை-15 நேற்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார் . நிகழ்ச்சியில்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் 3-வது புதன்கிழமை அன்று முகாம் நடத்தப்படும்.இம்முகாமில் ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுவர். நாளை முஹர்ரம் பண்டிகை என்பதால் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட முகாமானது நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பெரம்பலூர் அ.மே.நிபள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாரீஸ் மணிகண்டன் மற்றும் குரும்பலூர் அ.மே.பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் முரளி ஆகிய இரு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முரளி மாநில அளவில் 3-ஆம் இடமும், மாரீஸ் மணிகண்டன் 5-வது இடமும் பிடித்தனர் அசத்தினர். இந்நிலையில் இருவரையும் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட தலைவர் ஆர்.வி.ஜே. சுரேஷ் தலைமையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7,500 மதிப்பிலான சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 522 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
குன்னம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் ஒன்றியம், பெரிய வெண்மணி கிராமத்தில் அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலை பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 263 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 45 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,291 மாணவர்கள் பயன் பெற உள்ளனர்.
சென்னை தீவுத் திடல் பகுதியில் இன்று தமிழ்நாடு மாரத்தான்-2024 போட்டி 5 & 10 கிமீ தொலைவு என 2 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 10 கிமீ தொலைவுக்கான போட்டியில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் சு.கலைச்செல்வன் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு விழா குழுவினர் பரிசுத்தொகை மற்றும் பதக்கத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.