Perambalur

News October 22, 2024

2 மணி நேரம் மட்டுமே அனுமதி: ஆட்சியர்

image

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒளியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்க, நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அதனை மக்கள் கடைபிடிக்க வேண்டியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மாசில்லாத தீபாவளியை கொண்டாட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

News October 22, 2024

17 வயது இளம் சிறாருக்கு காவல்துறையினர் அறிவுரை

image

பெரம்பலூரில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்த போது இளம் சிறார் ஒருவர் வாகனம் ஓட்டியுள்ளார். இதையடுத்து அவரின் பெற்றோர்களை வரவழைத்து, சிறார் வாகனத்தை இயக்கினால் 25 ஆயிரம் அபராதம், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அறிவுரை வழங்கினர். மேலும் சிறார்கள் வாகனம் இயக்கினால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT

News October 21, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவார்கள். அது போல திருநாளில் மாசற்ற தீபாவளியாக பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 21, 2024

பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News October 21, 2024

பெரம்பலூர் ஆட்சியர் வீர வணக்கம்

image

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணிற்கு காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

பெரம்பலுர் அருகே சமத்துவ திருவிழா

image

நாரணமங்கலம் கிராமத்தில் சமூக வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் செல்லியம்மன் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த  திருவிழாவின் தொடக்கமாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவிழாவில் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக அனைவரும் தேர் திருவிழாவை கொண்டாட வேண்டும் என கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டது.

News October 21, 2024

மர்மமான முறையில் இரண்டு உயிர்கள் பலி

image

கை.களத்தூர் அருகே உள்ள பெருநிலா கிராமத்தில் சந்திரசேகர் என்பவரது இரண்டு பசுமாடுகள் மர்மமான முறையில் இருந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு பசு மாடுகள் எப்படி இறந்தன என்பதை தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

News October 20, 2024

பெரம்பலூரில் வெளுத்து வாங்கப்போகும் மழை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

பெரம்பலூரில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 20, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!