India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காப்பீட்டு ஆலோசகர் (Insurance Advisor) பணிக்கான 50 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Insurance Agent)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதினர் பெரியசாமி, சுகந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெரியசாமி குடிபோதையில் மனைவி சுகந்தியிடம் பிரச்னை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுகந்தி, அவரது தந்தை சுந்தர்ராஜ், தம்பி சுரேஷ் ஆகியோர் பெரியசாமியை இரும்பு கம்பி (ம) மரக்கட்டையால் தாக்கியதில் பெரியசாமி உயிரிழந்துள்ளார். போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரீடைல் சேல்ஸ் அசோசியேட் பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..
பெரம்பலூர், செட்டிகுளம் எனும் கிராமத்தில் அருள் மிகு தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இங்கு பிள்ளைபேறு வேண்டுவோர் சஷ்டியில் விரதம் இருந்து மலைமீதுள்ள தலவிருட்சமான வில்வமரத்தில் தொட்டில்கட்டி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மலையேறி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்
பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
தமிழ்நாடு மாநில வாணிபகழக (டாஸ்மாக்) கிட்டங்கி பெரம்பலூர் மேலாளர் திருஞானம் இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பாரதிவளவன், பெரம்பலூர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் என மொத்தமாக 22 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார்.
கோடைகாலங்களில் எதெல்லாம் செய்யக்கூடாது என “மாவட்ட ஆட்சியர் அலுவலகம்” சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெயில் அதிகமாக இருக்கும் பொழுது குழந்தைகள் முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம், வெயில் காலங்களில் டீ, காபி, ஆல்கஹால் போன்ற பானங்களை தவிர்க்கவும், வெற்றுக் கால்களுடன் நடக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
Sorry, no posts matched your criteria.