India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குரும்பலூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என பெரம்பலூர் மகிலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச் செல்வி, சவுக்கு சங்கர் மீது அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சென்னை சென்று புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை கைது செய்து இன்று வேப்பந்தட்டையிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நாளை பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை இன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் ஆகியோர் திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு விரைவில் அனைத்துக்கும் தீர்வு காண்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த எளம்பலூரை சேர்ந்த ரியாஜ் அகமது (20) என்பவரை போதைப்பொருள் குற்றவாளி என தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க எஸ்பி ஷ்யாம்ளாதேவி நேற்று கலெக்டர் கிரேஸ் பச்சாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் அவரை போதைப்பொருள் குற்றவாளி என தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக, பெயரை பரிந்துரை செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 6,000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
பெரம்பலூர், எளம்பலூர் சாலையிலுள்ள ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக, கிராம பகுதியைச்சேர்ந்த இளைஞர்களுக்கு, இலவச ஏசி, பிரிட்ஜ் பழுது நீக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட்.12 முதல் வழங்கப்படவுள்ளது. இதில் 19-45 வயதிற்குட்பட்ட எழுத, படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட்.07 மாலை 5 மணிக்குள் ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம் என இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநராகவும், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெகநாதன் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலராகவும், சென்னை பள்ளி கல்வி இயக்குநர் இன்று பதவி உயர்வு வழங்கி பணியமர்த்தியுள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.