India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் சார்பில் விலையில்லா சீருடைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெரம்பலூர் ஒன்றியத்தில் 87 பள்ளிகள், வேப்பூர் ஒன்றியத்தில் 127 பள்ளிகள், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 105 பள்ளிகள், ஆலத்தூர் ஒன்றியத்தில் 97 பள்ளிகள் என மொத்தம் 416 பள்ளிகளில் 1முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் 30,509 மாணவர்கள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர்.
எளம்பலூர் சாலையிலுள்ள ஐ.ஓ.பி வங்கியில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டகிராம பகுதியைச் சேர்ந்த ஆண்,பெண் இருபாலரும் இலவச கணினி கணக்கியல் பயிற்சி வருகின்ற ஆகஸ்ட் -12 முதல் அளிக்கப்படவுள்ளது.விருப்பமும்,தகுதியும் உடையோர் ஆகஸ்ட்-7 மாலை 5-மணிக்குள் ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பதிவுசெய்யுமாறு மைய இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாமளாதேவி உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜென்னட் ஜெசிந்தா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து, சித்ரா மாவட்ட புகையிலை தடுப்பு மருத்துவர் வனிதா ஆகியோர்கள் இணைந்து நாரணமங்கலம் கிராம பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்று (ஜூலை-30) விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் அனுமதி சீட்டு வழங்கும் இடம், மருந்தகம், ஆய்வகம், சித்தா, ஹோமியோபதி பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து உடனிருந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்துவம், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 473 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் எம்பி அருண் நேரு, இந்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தும் கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இந்த திட்டத்தின் நிதி சாத்தியம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் ஊதியம் கேட்டு 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். இதனை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அன்று பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக ஆட்சியரிடம் மனு கொடுத்து தீர்வு காண்பார்கள். அந்த சமயத்தில் சிலர் இடம், சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிக்க முயற்சி செய்வார்கள். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க, ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய மண்டல காவல்த்துறை தலைவர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சியாமளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை சாவடிகள் நேற்று அமைக்கப்பட்டது.இந்த வாகன சோதனையானது, இரவு நேர குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பெரம்பலூர் எல்லை பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூர், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.