India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் <

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நேற்று (29.10.2025) நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று (அக்.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் இன்று (29.10.2025) நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 31-10-2025 அன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், உச்சநீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும்; நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 ஏ.என்.எஸ் பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் மற்றும் ஆடுதுறை பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் உள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதுமட்டும் அல்லாது பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் இதே போல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.