India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் நேற்று ஆக.26 நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2அழகிகளை வைத்து மேலாளர் தட்சணாமூர்த்தி (45) விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலாளர் மற்றும் அவருடன் இருந்து இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- 044-28364951, அரசு பொது மருத்துவமனை- 044-25305000, அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- 044-25666000, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, அரசு ஸ்டான்லி மருத்துவமனை- 044-25281347, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. இதுபோன்ற முக்கிய எண்களை SHAR பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் மக்களுக்கான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பத்துடன் ஆனந்தமும், அமைதியும், செழிப்பும் நிறைந்த விழாவை கொண்டாட வேண்டும் என காவல்துறை வாழ்த்தியுள்ளது. விழாக்காலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் செப்.8 முதல் டிச.1 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்களன்று இரவு புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை திருநெல்வேலி ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக செப்.7 முதல் நவ.30 வரை திருநெல்வேலியில் ஞாயிறு இரவு புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் வந்தடையும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் ’11விநாயகர் சபை’ உள்ளது. திரிபுராந்தர்களை அழிக்க சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் சென்றதால், தன்னை வணங்காமல் சென்றது ஏன் என விசாரணை சபையை அமைத்தார். அது தான் இந்த 11 விநாயகர் சபை. வெங்கடாஜலபதி தன் கடனை அடைக்க, இங்கே வந்து தீர்வு கண்டார். அதனால் இங்கு சென்று வழிபட்டால் செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் சென்று வாருங்கள். SHARE IT
விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் பிள்ளையார் வைத்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம் (அ) அல்லது தர்மபுரி சாலை விநாயகர் கோயிலுக்கு சென்று வரலாம். வழிபடுவதற்கான நேரம் : காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி, 10.40 மணி முதல் பகல் 01.10 மணி, மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 மணி. SHARE IT
தி.மலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் எப்போதுமே ஸ்பெஷல். வழக்கமாக தொந்தியுடன் இருக்கும் விநாயகர் இங்கு நந்தியுடன் இருக்கிறார். பிள்ளையார் கோயில் என்றாலும் இங்கே விநாயகர் சிலை இருக்காது. மூன்று வாசல்களை கொண்ட சிறிய குகை மட்டுமே உள்ளது. இந்த குகை வழியே தவழ்ந்து சென்று வெளியே வந்தால், உடல் வலிகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. SHARE IT
திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.