Tamilnadu

News March 20, 2024

தேர்தல் பணி ஆசிரியர்கள் அவசர கோரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 மற்றும் ஏப்.7ம் தேதிகளில் நடக்கிறது. அதில் 24ம் தேதி பங்குனி உத்திரம், குருத்தோலை ஞாயிறு ஆகிய விழாக்கள் இருப்பதால் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) அவசர கோரிக்கை மனு அளித்தனர்.

News March 20, 2024

குட்கா பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

image

செங்குன்றம் அருகே மாதவரத்தில் திரு ராணி லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற குடோனில் வெளிநாட்டிற்கு கடத்த வைத்திருந்த 6000 கிலோ குட்காவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் 6000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 20, 2024

கோத்தகிரியில் 7 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

image

கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 7 பேருக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

News March 20, 2024

ஏர்வாடி அருகே 5 லட்சம் பணம் பறிமுதல்

image

கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 20, 2024

குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

image

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 20, 2024

தேர்தல் கட்டுப்பட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பட்டு அறையில், பறக்கும்படை வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (20.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2024

அரியலூர்: பொது ஏலம் ஒத்திவைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 20, 2024

திருப்பத்தூரில் பயணிகள் அவதி

image

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .

News March 20, 2024

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 32 மனுதாரர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமை வகித்தார்.

News March 20, 2024

செங்கல்பட்டு அருகே தீவிபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!