Tamilnadu

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

ராணிப்பேட்டை: முன்னாள் தேசியப்படை வீரர்களுக்கு..!

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட பாதுகாப்பு பணியில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் தேசியப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04162-977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

News March 21, 2024

அந்தியோதயா நெல்லையிலிருந்து இயக்கம்

image

நாகர்கோவிலில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை சிக்னல் பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அதன்படி இந்த ரயில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் நெல்லையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று (மார்ச் 20) இரவில் தெரிவித்துள்ளது.

News March 21, 2024

நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.

News March 21, 2024

சென்னையில் IT சோதனை

image

சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. நீலாங்கரையில் பாலா என்பவரது வீட்டிலும், கேஸினோ டிரைவ், ப்ளூ பீச் சாலை மற்றும் அண்ணா நகர் அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 21, 2024

திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர். சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 21, 2024

சென்னை: 4 பேர் வேட்பு மனு தாக்கல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று(மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்நாளில் சென்னையில் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேர் வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். டெபாசிட் தொகையாக பொது பிரிவினருக்கு ரூ.25 ஆயிரமும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.12,500 செலுத்த வேண்டும்.

News March 21, 2024

திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில் இந்த மழை குளுமையான சூழலை ஏற்படுத்தும்.

News March 21, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை குளுமையை ஏற்படுத்தும்.

News March 21, 2024

குமரி: மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

image

குமரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர வைப்பறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று(மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!