Tamilnadu

News August 27, 2025

ஆக.28 அன்று நடைபெறும் முகாம் விவரம்

image

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி, போடி, தேனி, கம்பம் வட்டாரம் போன்ற பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஆக.28 அன்று நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 27, 2025

காலை உணவு திட்டத்தில் 86,645 பேர் பயன்: எ.வ.வேலு

image

திருவண்ணாமலை முகல்புரா முஸ்லிம் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு காலை உணவு திட்டத்தை (ஆக.26)தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா். நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 750 பள்ளிகளைச் சோ்ந்த 86,645 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்று தெரிவித்தார்.

News August 27, 2025

கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு வரை பயணிகள் இருந்தனர்.

News August 27, 2025

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி பிரபல உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று (ஆக. 26) அதிரடி ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அங்கிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளத்தாக தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

News August 27, 2025

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய எம்.எல்.ஏ

image

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஆவடி தி.மு.க சட்டமன்றத் மன்றத் உறுப்பினர் சா.மு நாசர் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்களை பொது மக்களுக்கு கூறியுள்ளார். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

News August 27, 2025

சேலம் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில்கள்!

image

சேலம் வழியாக வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.27, செப்.01, 06 தேதிகளில் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.29, செப்.03, 08 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.

News August 27, 2025

ஈரோட்டில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம்

image

ஈரோடு இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் துவங்கியது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்-ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படயுள்ளனர்.

News August 27, 2025

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

image

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 27, 2025

1,341 இடங்களில் சிலை வைக்க அனுமதி

image

தர்மபுரி சப்-டிவிஷனில் அரூர் – 349, பென்னாகரம் – 294, பாலக்கோடு – 355, என மாவட்டத்தில் 1,341 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் சார்பில் 1,241, பா.ஜ., சார்பில் 42, ஹிந்து முன்னணி 25, ஆர்.எஸ்.எஸ்., 31, ஹிந்து மக்கள் கட்சி, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் தலா ஒரு இடத்தில் என விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடக்க உள்ளது.

error: Content is protected !!