Tamilnadu

News August 27, 2025

மதுரையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

image

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.

News August 27, 2025

நாமக்கல்: மாணவிகள் வீடுகளில் ஆட்சியர் விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேற்று(ஆக.26) எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உயர்வுக்குப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம், உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருந்தனர்.

News August 27, 2025

கரூர் ராக்கெட் பந்து வீரர்கள் சாதனை!

image

கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான U-19 பிரிவிலான ஆண்களுக்கான ராக்கெட் பந்து போட்டியில் கரூர் மாவட்டம் 4ஆம் இடம் பிடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய குணா மற்றும் யோகபாலன் ஆகிய இருவரும் தேசிய போட்டிக்கு தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் வைரப்பெருமாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News August 27, 2025

உச்சம் தொட்ட மல்லிக்கைப்பூ கிலோ ரூ.2000

image

கோவை மலர் சந்தையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 10 டன் வரத்து இருந்த நிலையில் நேற்று 25 டன் பூக்கள் வந்தன. மல்லிகை கிலோ 2000-2200, ஜாதி மல்லி 1200, ரோஸ் 300-320, செவ்வந்தி 400 ரூபாய்க்கு விற்றன. மழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், விலை இருமடங்கு உயர்ந்துள்ளதாக மலர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

News August 27, 2025

அரியலூரில் GST TDS மற்றும் சுரங்க உரிமம் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வணிகவரித்துறையின் சார்பில் GST TDS (GSTR-07) கட்டாய அமலாக்கம் மற்றும் சுரங்க உரிமம் பெற்றவர்கள் Seigniorage கட்டணம் செலுத்திய விவரங்களை பகிர்வு குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 27, 2025

பழங்குடி இன இளைஞர்களுக்கான வாய்ப்பு!

image

சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பங்களை விண்ணப்பித்து பயனடையுமாறு, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.

News August 27, 2025

விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை

image

ராணிப்பேட்டை, ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினகிரி பால முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 கொழுக்கட்டைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.

News August 27, 2025

மயிலாடுதுறை: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெடி பாலமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

News August 27, 2025

காரைக்காலில் சுனாமி ஒத்திகை கருத்தரங்கம்!

image

தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதலின்படி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ள, யூனியன் பிரதேச அளவிலான சுனாமி ஒத்திகை பயிற்சிக்கான, நெறிமுறைகள் பற்றிய கருத்தரங்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் காணொளி காட்சி மூலம் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News August 27, 2025

பெரம்பலூர்: ஊர்க்காவல் படையில் பணியிடங்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 17 பணியிடங்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் (28-08-2025) முதல் (25.09-2025) வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் எனவும் மேலும் விவரங்களுக்கு 9894476223, 7092534474 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!