India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் புதுச்சேரி வாழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாக, பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா மத நல்லிணக்கத்தையும் சமுதாய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் (26/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
திருச்சி மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி முகாம்” இருங்களூர் எஸ்.ஆர்.எம் கல்வி வளாக கூட்ட அரங்கில் ஆக.28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஒருநாள் வைணவ திருக்கோவில்கள் சுற்றுலா – சென்னை -1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து பஸ் புறப்படும். பயணத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஸ்தலசயன பெருமாள் கோவில் உட்பட 6 திவ்யதேச கோவில்கள் அடங்கும். பயணக்கட்டணம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (26.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் SSI மற்றும் HC அலுவலர்களின் பெயர், கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், கன்னியாகுமரி பகுதிகளில் தனித்தனியாக ரோந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அவசர சூழ்நிலையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04652-220417 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு ரோந்து போலீசாரின் விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை சரகத்திற்கு குத்தாலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சீர்காழி சரகத்திற்கு புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.