India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் மாரிட்டன் பள்ளியின் சீனியர் கே.ஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க,செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுகந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்
அதிமுக அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளராக A.L.விஜயன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று(மார்ச் 20) ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை நகர அதிமுகவினர் நகர செயலாளர் சந்தோஷம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டுகிற குறிப்புகள் இடம் பெற கூடாது. கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மற்ற கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விவரங்கள் பற்றியோ ஆட்சேபனையான விவரங்கள் இடம் பெற கூடாது. மீறினால் தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு.
பர்கூர் அருகே கப்பல்வாடியில் சீனிவாச பெருமாள், கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. நேற்று சீனிவாச பெருமாள், பாலமுருகன், ஓம் சக்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்த 9 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் சொந்த செலவில் விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றனர். இதில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் விமானத்தில் சென்றனர்.
2024 மக்களவை தேர்தலில், தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சார்பில் புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி, இளங்கலை பட்டப் படிப்பும், இளங்கலை சட்டப்படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி மாணிக்கம் எம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் 6 முறை போட்டியிட்டு வென்று எம்பியானது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் நேற்று சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நாளை மறுநாள் (மார்ச் 23) காலை 10 மணியளவில் வண்ணார்பேட்டை தனியார் ஹோட்டலில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரோடு முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமாரிடம் நேற்று (மார்ச்.20) ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த மின்னல் முருகேஷ் (55) என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட ஆட்டோ, சிலிண்டர் அல்லது பிரஷர் குக்கர் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கிட கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.