India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை குளுமையை ஏற்படுத்தும்.
குமரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர வைப்பறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று(மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களே அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் கொளுத்திவரும் நிலையில் இந்த மழை குளுமையான சூழலை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர்.
புதுவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் 90 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது இடத்தில் கலவரம் மற்றும் அமைதியை குலைக்கும் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற வழக்கு உள்ளவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 107 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து வருகின்றனர்.
கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் பாலா மாநிலக்குழு முடிவுகள் குறித்து பேசினார்கள். இதில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரையும், கரூர் காங்கிரஸ் வேட்பாளரையும் பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 224 மது பாட்டில்கள் நேற்று(மார்ச் 20) பறிமுதல் செய்யப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் அருகே சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த காரை சோதித்தில், ரூ.62,000 மதிப்புள்ள 224 மதுபாட்டில்களை அனுமதியின்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவருக்குப் பதிலாக மகேஷ் ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளராக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சல்மானை நியமித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் மாரிட்டன் பள்ளியின் சீனியர் கே.ஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பள்ளி நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்க,செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சுகந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்
Sorry, no posts matched your criteria.