Tamilnadu

News March 23, 2024

கடலூர் அருகே விபத்து.. 40 பயணிகள் தப்பினர்

image

திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.

News March 23, 2024

கன்னியாகுமரி அருகே விபத்து

image

குமரி மாவட்டம் பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் நேற்று இரவு இளஞ்சிறை பகுதியில் பைக்கில் சென்ற போது எதிரே வந்த சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். வினோத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை பறிமுதல் செய்த பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2024

காஞ்சிபுரம் அருகே 2 பேர் கைது

image

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் நிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் அளித்து விசாரணை மேற்கொண்டதில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வீரவேல் மற்றும் கருணாகரனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News March 23, 2024

திருநெல்வேலி வீரருக்கு குவியும் பாராட்டு!

image

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 23, 2024

உதகையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

image

உதகை-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள நொண்டிமேடு பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் (மார்ச் 22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் பிரச்சனை குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இந்த மறியல் நடந்ததாக தெரிவித்தனர். உதகை பி1 நிலைய போலீசார் பொதுமக்களை சமாதானம் படுத்தி அப்புறப்படுத்தினர்.

News March 23, 2024

திருவெண்ணெய்நல்லூர் அருகே தேர் திருவிழா

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஒட்டந்னதல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை ஒட்டி இன்று (மார்ச் 23) பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

News March 23, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் ’12 டி’ ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

News March 23, 2024

அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,272 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் முதல் கட்ட பயிற்சி மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

திருப்பத்தூர் அருகே பரபரப்பு

image

வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது 17 வயது மகள் பல்லவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மன வேதனையடைந்த பல்லவியின் பெற்றோர் இன்று அம்பலூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News March 23, 2024

செங்கல்பட்டு: பங்குனி உத்திர திருவிழா

image

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரு கருணை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

error: Content is protected !!