Tamilnadu

News August 16, 2025

பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.

News August 16, 2025

கள்ளக்குறிச்சி: மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

image

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் வரலாற்று மன்ற மாணவிகள் 60 பேருக்கு, கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து, முறையாக படியெடுப்பது எவ்வாறு என்றும், பாதுகாப்பது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான சிங்கார உதயன் பயிற்சியை மேற்கொண்டார்.

News August 16, 2025

சேலத்தில் இப்படி மோசடி கவனமாக இருங்கள்

image

அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு, உங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அத்தொகையைப் பெற QR Code ஸ்கேன் செய்து, PIN உள்ளிடச் சொல்லி அறிவுறுத்துவார்கள். அத்தகைய நபர்களை நம்பி QR Code ஸ்கேன் செய்து PIN உள்ளிடும் போது, உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும். இத்தகைய மோசடி அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்க வேண்டாம் என சேலம் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறை.

News August 16, 2025

72ம் ஆண்டு செர்ரிகான் மாநாடு-முதல்வர் பங்கேற்பு

image

தமிழ்நாடு கண் மருத்துவ சங்கம் சார்பில், 72ம் ஆண்டு செர்ரிகான் மாநாடு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு, டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செர்ரிகான இயக்க செயலாளர் வனஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

News August 16, 2025

திண்டுக்கல்: செஸ் வீரர் பிரனேஷ்க்கு அமைச்சர் வாழ்த்து

image

திண்டுக்கல், சென்னையில் நடைபெற்ற செஸ் கிராண்ட்மாஸ்டர் தொடரில் சேலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் பிரனேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை சதுரங்க உலகில் புதிய உயரங்களை எட்டும் பயணத்துக்கு வலுவான அடித்தளமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் ஆன அ.ர.சக்கரபாணி வாழ்த்தி உள்ளார்.

News August 16, 2025

ராமநாதபுரம்: உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது

image

அபிராமம் அருகே கோனேரியேந்தல் கிராமத்தில் முனியசாமி வீட்டில் 14 பவுன் நகை ஆகஸ்ட் 8 அன்று திருட்டுபோனது. அபிராமம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விரல் ரேகை பரிசோதனை மேற்கொண்டனர். விசாரணையில், முனியசாமியின் உறவினர் வித்யாவின் விரல் ரேகை பொருந்தியது. இதையடுத்து, வித்யாவை கைது செய்த காவல்துறையினர், திருடப்பட்ட 14 பவுன் நகையை மீட்டனர்.

News August 16, 2025

நீலகிரி: டிரோன் கேமரா மூலம் யானைகள் விரட்டியடிப்பு

image

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.

News August 16, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 16, 2025

வாஜ்பாய் நினைவு தினம் -கவர்னரும், முதல்வரும் மரியாதை

image

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாளையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் (மேரி கட்டிடம்) அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு இன்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

News August 16, 2025

புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் இயக்குநராக சோமசேகர் அப்பாராவ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் புதுச்சேரி மின்திறல் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை புதுச்சேரி சார்பு செயலாளர் கந்தன் என்கிற சிவராஜன் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!