India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியையொட்டி இன்று நாமக்கல் தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் – துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் காலையில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் காரங்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படும் என்றும் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.
போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
விருதுநகர், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் இசக்கி (கர்ப்பிணி). இவரது ஸ்கேன் அறிக்கையை பார்க்காமல் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல் தொந்தரவுகள் காரணமாக மீண்டும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தை இறந்து 3 நாட்கள் ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 28) நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 13 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் 1ம் தேதி வரை நெல்லையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் இந்த ரயில் நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோயிலில் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள அறிவுறத்தல் .
பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குழுவினர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது ரூ.64 ஆயிரத்து 680 எடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த பணத்திற்கு அவர்களிடம், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை பாபநாசம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் மேல அம்பிகாபுரம் ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளிட்ட திருச்சியில் பிரதான கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திரளான கிறிஸ்தவர்கள் தங்களது பங்கு கோயில்களுக்கு சென்று வழிபாட்டில் பங்கேற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.